விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு நேரத்தில் மருத்துவ பயனாளிகள் பிரிவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழுத் தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான G.V. மார்கண்டேயன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை, மருந்துகள் கிடைப்பது, மருத்துவர்களின் சேவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவமனையின் அடிப்படை வசதிகள், இரவு நேர பணியாளர் நிலை, நோயாளிகளின் தேவைகள் குறித்து மருத்துவ அலுவலர்களிடமும் விளக்கம் பெற்றார்.
ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரிசெய்யவும், நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவை வழங்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.