தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் தொழிலாளர்களுக்காக கட்டப்பட்டு வரும் இஎஸ்ஐ (ESI) மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தாசில்தார் முரளிதரன் ஆகியோர் உட்பட பல துறை சார்ந்த உயரதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.
கட்டுமானப் பணிகளின் முன்னேற்ற நிலை, தொழிலாளர்கள் பயன்பெறும் வசதிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கனிமொழி கருணாநிதி விரிவாக ஆய்வு செய்து, விரைவில் பணிகள் நிறைவு பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த இஎஸ்ஐ மருத்துவமனை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், தூத்துக்குடி மற்றும் அருகிலுள்ள தொழிலாளர் சமூகத்திற்கு பெரிய அளவில் மருத்துவ சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் புதிய இஎஸ்ஐ மருத்துவமனை – கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்த கனிமொழி கருணாநிதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் அக்காநாயக்கன்பட்டி அரசு பள்ளிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய கட்டிடங்கள்!!
அடுத்த
தூத்துக்குடியில் 23ம் தேதி மின் தடை: பரவலான பகுதிகள் பாதிப்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026