ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் கொல்லங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.47.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு கூடுதல் வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் சலீஸ், உதவி தலைமை ஆசிரியர் ஷீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் சசிக்குமார், பொதுப்பணித்துறை பொறியாளர் அரவிந்த், ஒன்றிய பொறியாளர் செந்தில்குமார், ஊராட்சி செயலர் பாலசுப்பிரமணியன், ஒப்பந்தக்காரர் கருப்பசாமி, கிளைக்கழக செயலாளர்கள் குமார், பாலமுருகன், நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் புதியம்புத்தூரில் உள்ள சி.பா. ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அருண் – புவனேஸ்வரி திருமண விழாவிலும், தூத்துக்குடி அபிராமி மஹாலில் நடைபெற்ற வழக்கறிஞர் நயினார் இல்ல திருமண விழாவிலும் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் கல்வி, சமூக மற்றும் பொதுநல துறைகளில் தொடர்ந்து செயற்படும் சண்முகையாவின் பணி, பொதுமக்களிடையே பாராட்டுக்குரியதாக உள்ளது.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரத்தில் கல்வி வளர்ச்சிக்கு புதிய ஒளி – நபார்டு நிதியில் இரண்டு புதிய வகுப்பறைகள் திறப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பட்டினமருதூரில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் பெண் தெய்வம் மற்றும் பாண்டிய சின்னமுடைய இளைப்பு உபகரணம் — தொல்லியல் வட்டாரத்தில் அதிர்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்பு!!
அடுத்த
முத்தம்மாள் காலனியில் வடிகால், சாலை பணிகள் தொடங்கவுள்ளன – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026