தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் பஜாரில் செயல்பட்டு வந்த ஓபிஎஸ் அணி தொழிற்சங்கமான ஜெ.ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், கௌரவ ஆலோசகர் லோகு கணேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் அதிமுகவில் இணைந்தது.
இந்த நிகழ்ச்சி அதிமுக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான டூவிபுரம் மாநில அதிமுக வர்த்தக அணி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் தெற்கு மண்டல ஓட்டுநர்கள் அணி அவைத்தலைவர் மாரிமுத்து, தலைவர் ஆனந்த், செயலாளர் சுபாஷ், வேளாங்கண்ணி, பொருளாளர் பூண்டி செல்வம், உறுப்பினர்கள் செந்தில்குமார், மாரிமுத்து, இளையராஜா, இசக்கிராஜா உள்ளிட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
அனைவருக்கும் சீருடைகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், “சிறப்பாக செயல்பட்டு அதிகமான உறுப்பினர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும். இபிஎஸ் தலைமையில் கட்சி வலுவாக வளர்ந்து வருகிறது. அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்” எனக் கூறினார்.
இந்நிகழ்வு, தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் இபிஎஸ் அணியின் வலுசேர்க்கையை உறுதி செய்த முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
தூத்துக்குடி
முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் ஓபிஎஸ் அணியினர் இபிஎஸ் அணியில் இணைந்தனர்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சண்முகையா எம்எல்ஏ கீழப்பூவாணியில் பொது விநியோகக் கடை திறந்து வைத்தார்!!
அடுத்த
கரூர் கூட்ட நெரிசல் விபத்து: தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு மத்திய பாதுகாப்பு வழங்கக் மக்கள் நல இயக்கம் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026