ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) சார்பில் போட்டியிடுவதற்காக தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளரும், கருங்குளம் முன்னாள் சேர்மனுமான டாக்டர் எஸ். எம். ஏ. கோசல்ராம் ராஜா இன்று அதிமுக தலைமைக்கழகத்தில் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், கடம்பூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில், அதிமுக அமைப்பு செயலாளர் கோகுல் இந்திராவிடம் விருப்ப மனு வழங்கப்பட்டது.
கட்சியின் கொள்கைகள் மற்றும் பொதுச் செயலாளர் வழிகாட்டுதலின்படி, ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றும் நோக்கில் இந்த விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டதாக டாக்டர் கோசல்ராம் ராஜா தெரிவித்தார்.
இந்த நிகழ்வு அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதுடன், ஓட்டப்பிடாரம் தொகுதியில் அரசியல் சூழலில் புதிய எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி – அதிமுக சார்பில் போட்டியிட டாக்டர் கோசல்ராம் ராஜா விருப்ப மனு தாக்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"சாக்தஸ்ரீ" சற்குரு ஶ்ரீனிவாச சித்தர் தலைமையில் தூத்துக்குடி பிரத்தியங்கிரா பீடத்தில் ஆஞ்சநேய ஜெயந்தி மற்றும் பிரத்தியங்கிராதேவி மகா அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் விருப்பமனு தாக்கல்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026