தூத்துக்குடி முத்தம்மாள் காலணியில் கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வித்யா பிரகாசம் மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளியை தனியார் அமர் சேவா சங்கத்திற்கு வழங்கக் கூடாது என பெற்றோர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அனுமதி இல்லாமல் ஐந்து புதிய பூட்டு சாவியை கொண்டு வந்து தனியாரிடம் பள்ளியை ஒப்படைக்க முயற்சி செய்த அதிகாரியை பணி நீக்க செய்ய வேண்டும்.

தூத்துக்குடி மாநகரில் 2003 ஆம் ஆண்டு அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றிய ராஜாராம் ஐ.ஏ.எஸ் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி நல வாரியம் மூலம் தூத்துக்குடியில் வித்திய பிரகாசம் மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளியை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் மற்றும் மாவட்டத்தினுடைய உயர் அதிகாரிகளை கொண்டு ஒரு குழுவாக அமைத்து இந்த பள்ளியை 2003 ம் ஆண்டு தொடங்கி வைத்திருக்கிறார்கள்.
இதுவரை 22 ஆண்டுகள் இந்த பள்ளியானது மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கிறது. இதன் பின்பு இதுவரை 12 மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தூத்துக்குடிக்கு மாறுதலாகிய வந்திருக்கிறார்கள். அனைத்து உதவிகளும் செய்து வந்திருக்கிறார்கள் இந்த பள்ளியில் சுமார் ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள் இவர்களுக்கு அரசு தொகுப்பு புதிய அடிப்படையில் மாற்றுத் திறனாளி நல வாரியத்தின் மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. 
இந்தப் பள்ளியில் சுமார் 30 குழந்தைகள் படித்து வருகிறார்கள் இந்த பள்ளிக்கு கூடுதலாக தூத்துக்குடி கனிம வளத்துறை மூலமாக ஒரு கோடி மதிப்பில் கட்டுமானங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் சுமார் 17 லட்சத்தில் புதிதாக பஸ் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பஸ் இப்போது ஓட்டுநர் இல்லாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரில் தொழில் செய்து வரும் சாமி பெட்ரோல் பங்க் உரிமையாளர் இந்த பஸ் இருக்கை தேவையான டீசல் வசதியை இலவசமாக வழங்கி வந்திருக்கிறார்கள். மேலும் இந்த பள்ளி மாணவர்கள் அமர்வதற்காக சிறப்பு இருக்கைகளும் சுமார் 5 லட்சம் மதிப்பில் செய்து கொடுத்திருக்கிறார்கள் இந்த பள்ளி மாணவர்களுக்கு காலை மதியம் அரசு சார்பில் உணவு வழங்கப்படுகிறது இந்த பள்ளியில் பணிபுரி ஆசிரியர்கள் சேவை மனப்பான்மையுடன் குறைந்த ஊதியம் பெற்று பணிபுரிகிறார்கள். 
இப்போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிதாக வருகை தந்திருக்கும் உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் ஐஏஎஸ் இந்த பள்ளியை ஆய்வு செய்வதற்கும் மற்றும் சில பணிகளுக்கு தனியார் அமர் சேவா சங்கம் தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறப்பாக செயல்படும் இந்த பள்ளியை தனியார் தொண்டு நிறுவனத்திற்கு கொடுப்பது ஏன் என்று இந்த பள்ளியில் படிக்கும் மாணவருடைய பெற்றோர்களும் சமூக செயல்பாட்டாளர்களும் பல்வேறு கேள்வியை எழுப்புகிறார்கள்.
இந்த பள்ளியை அரசே நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் அவர்களுக்கு விடுதலை சிறுத்தை கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எம்பி கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் அரசே நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதேபோல் தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் சார்பாக அதன் மாநில தலைவர் சாமு காந்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கோரிக்கை மனுவும் கொடுத்திருக்கிறார். 
இந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பணியாற்றும் ராஜேஸ்வரி என்ற அதிகாரி கடந்த சில தினங்களுக்கு முன்பு அமர்சேவா தொண்டு நிறுவனத்தின் உடைய ஊழியரை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு வந்து இந்த பள்ளிக்கு புதியதாக ஐந்து பூட்டு வாங்கப்பட்டிருக்கிறது. இனிமேல் இந்த புதிய பூட்டு சாவியை நீங்கள் பயன்படுத்த வேண்டும் உங்களிடம் ஐந்து சாவி இருக்கும் அமர் சேவா தொண்டு நிறுவனத்தின் ஊழியரிடம் ஐந்து சாவிகள் இருக்கும் என்று கூறி புதிய பூட்டை ஒப்படைத்து இருக்கிறார்கள்.
அதற்கு அங்கு பணிபுரிந்து வந்த ஆசிரியர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடைய எந்த உத்தரவும் இல்லாமல் நீங்கள் இதுபோன்று என்னிடம் புதிய பூட்டை கொடுத்தால் நான் ஐந்து சாவியை வைத்திருப்பேன். அந்த ஊழியர் ஐந்து சாவி வைத்திருப்பார் இங்கு உள்ள அரிசி பருப்பு மற்றும் இதர பொருள்கள் காணாமல் போய்விட்டால் யார் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் பதில் கூற முடியும் எனவே நீங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் உத்தரவு பெற்று வாருங்கள் அதன் பின்பு புதிய பூட்டை பயன்படுத்தி பூட்டிக் கொள்ளலாம் என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். 
உடனே அந்த அதிகாரி ராஜேஸ்வரி அந்த ஊழியரை அழைத்துக் கொண்டு அங்கிருந்து கோபமாக சென்று விட்டார்கள் இதன் பின்பு மீண்டும் அந்த அமர் சேவா தொண்டு நிறுவனத்தின் ஊழியர் தற்போதும் அந்த பள்ளியில் வந்து தினந்தோறும் அமர்ந்திருக்கிறார் இந்த அனைத்து காரணமும் இந்த பள்ளியை தனியாரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஒப்படைத்து விடுவார்களோ என்ற ஐயப்பாடு பெற்றோர்களிடமும் சமூக செயல்பாட்டாளர்களிடமும் உள்ளது.
எனவே இந்த தனியார்விடம் ஒப்படைக்கும் ஆய்வு செய்யும் பணியை உடனே நிறுத்த வேண்டும் எப்போதும் போல அரசினுடைய கட்டுப்பாட்டில் இந்த பள்ளி செயல்பட வேண்டும் இந்த பள்ளி மாணவர்களுக்கு எந்த விதமான குறைபாடு இருந்தாள் சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்றால் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் உள்ள மருத்துவ டாக்டர்களை பயன்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் தமிழக அரசிற்கும் கோரிக்கை வைக்கிறார்கள். இந்த பள்ளியில் கடந்த 22 வருடமாக பணிபுரிந்து வரும் அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் அரசு நிரந்தரமான பணியை அறிவித்து நிரந்தர ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும்.
இந்த பள்ளியை தனியாரிடம் ஒப்படைக்கும் செயலை கண்டித்து நாளை (29.07.2025) அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன்பு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் தங்களுடைய முடிவை மாற்றி எப்போதும் போல தூத்துக்குடி வித்யா பிரகாசம் மாற்றுத்திறனாளி சிறப்பு பள்ளியை அரசே நடத்த உத்தரவு வழங்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர் .