தூத்துக்குடியில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா வட்டக்கோவில் அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில் பிரபாகர் தலைமையில் வகித்தார். நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கோபால், வார்டு தலைவர்கள் ராஜரத்தினம், பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் 123 பேருக்கு நோட்டு புத்தகம் மற்றும் சேலைகள் வழங்கி பேசுகயைில் காமராஜர் தமிழகத்தினுடைய முதலமைச்சராக 9 ஆண்டு காலம் மிக சிறப்பான ஆட்சியை தமிழகத்திற்கு தந்தார்.

மக்களுக்கு எது தேவையோ அதை கண்டறிந்து, படிப்பதற்கு கல்வி நிலையங்களை திறந்தார். விவசாயம் பெருகுவதற்கு ஏராளமான அணைக்கட்டுகளை கட்டினார். வேலைவாய்ப்பு பெருகிட ஏராளமான தொழிற்சாலைகளை திறந்தார். இப்படியாக தமிழகத்திற்கு ஒரு பொற்கால ஆட்சியை தந்தவர் தான் காமராஜர்.

ஆனால் இன்றைக்கு மத்தியிலே ஆண்டு கொண்டிருக்கின்ற பிரதமர் மோடி மக்களை ஏமாற்றும் வகையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றார். நான் நாட்டின் பிரதமராக வரும் பட்சத்தில் ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் வழங்குவேன் என்று சொன்னார். ஆண்டுக்கு 2 கோடி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன் என்று சொன்னார்.

விவசாயம் பெருகிட பல்வேறு சலுகைகள் வழங்குவேன் என்று சொன்னார். ஆனால்  எதையுமே பிரதமர் மோடி செய்யவில்லை. படித்த பட்டதாரிகளை பக்கோடா விற்கச் சொன்னார் விவசாயிகள் போராட்டம் நடத்தினால் இரும்பு கரம் கொண்டு அவர்களை அடக்கினார்.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறார். கச்சா எண்ணெய் உலக அளவில் சரிந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மறுக்கிறார். மக்கள் வரிப்பணத்தை சுரண்டி அதன் மூலம் உள்நாட்டு கட்டமைப்பை உருவாக்குகிறேன் என்ற பெயரில் அம்பானி, அதானிக்கு உதவி கொண்டிருக்கிறார்.  

இப்போது தமிழகத்தினுடைய முதல்வர் ஸ்டாலின பெருந்தலைவர் காமராஜர் வழியில் மக்கள் தேவைகளை அறிந்து, உணர்ந்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார்.

மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண் திட்டம், வேலைவாய்ப்பு பெருகிட பல்வேறு தொழிற்சாலைகள் என சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கின்றார். திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே மத்தியில் மக்களை ஏமாற்றி வருகின்ற மோடி தலைமையிலான பாஜக அரசும், 5 ஆண்டுகளாக தமிழகத்தில் மக்களை ஏமாற்றிய எடப்பாடி அவர்களும், கைகோர்த்து திமுக அரசை அகற்றுவதற்கு ஆயிரம் பொய்களை வீதி வீதியாக பரப்பிக் கொண்டு வருகிறார்கள்.

அதிமுக, பாஜக கூட்டணி என்பது என்னையும் தண்ணீரும் போன்றது அது ஒட்டவே ஒட்டாது அமித்ஷா கூட்டணி ஆட்சி என்கின்றார். எடப்பாடியோ தனித்த ஆட்சி என்கிறார். அவர்களுக்குள் ஏகப்பட்ட முரண்பாடு இவர்களை தமிழக மக்கள் ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றதோ அந்த அணிதான் மகத்தான வெற்றி பெறும்.

காங்கிரஸ் தயவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. என்று பேசினாா். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ சுடலை யாண்டி, மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, காமராஜர் மற்றும் சிவாஜி நற்பணி மன்ற துணைத் தலைவர் அருள்வலன், மாநகர் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மைதீன், மாநில பேச்சாளர் சபரி ஆனந்தம், அமைப்புசாரா தொழிற்சங்கம் மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி மேரி, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கமலாதேவி, மாநகர் மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெபராஜ், சீனிவாசன், மாவட்ட செயலாளர் நாராயணசாமி, மாவட்ட பொறுப்பாளர் பெத்துராஜ், எட்வர்ட்ராஜ், வார்டு தலைவர்கள் மகாலிங்கம், மரியசிங்கம், ஜெபமாலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.