பெருந்தலைவர் காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடியில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தலைமையில்
கடந்த ஜூலை 21 ம் தேதி தூத்துக்குடி விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் பேசுகையில் மாபெரும் உலகத் தலைவர் காமராஜரை எந்த ஒரு அடிப்படை தகுதியும் இல்லாத திமுக எம்.பி., திருச்சி சிவா என்பவர் இழிவுபடுத்தி பேசியது நாடார் சமுதாயத்தினரை மட்டுமட்டுமல்ல அனைத்து சமுதாயத்தினர் மற்றும் அனைத்து கட்சியினர் மனதையும் புண்படுத்தியுள்ளது.
அப்படி அனைத்து மக்களுக்கும் தலைவராக இருக்கக்கூடிய கர்ம வீரர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய திருச்சி சிவாவை கண்டித்தும், திருச்சி சிவா மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம். திருச்சி சிவா மீது முதல்வர் ஸ்டாலின் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இது எங்களுக்கு மிகுந்த மனவேதனை ஏற்படுத்துகிறது.
எம்பி திருச்சி சிவா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக முதல்வர் தூத்துக்குடி வருகையின் போது அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில் வருகிற 4 ம் தேதி தூத்துக்குடி வருகை தரும் முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி அகிம்சை வழியில் போராட்டம் நடைபெறும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
ஆகஸ்ட் 4 தூத்துக்குடி வருகை தரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் - பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனர் எஸ்.பி. மாரியப்பன் தகவல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
30 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி தந்த சண்முகையா எம்எல்ஏவிற்கு நன்றி தெரிவித்து வரும் தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் கிராம மக்கள்!!
அடுத்த
தூத்துக்குடியில் விசிக சார்பில் திருச்சியில் நடைபெற்ற "மதச்சார்பின்மை காப்போம்" பெருந்திரள் பேரணி - தீர்மான விளக்க பொதுக்கூட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026