உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மரியாதைக்குரிய பி.ஆர். கவாய் அவர்களை நீதிமன்றத்தில் வைத்து அவமதித்த சனாதன சங்கி ராக்கேஷ் கிஷோர் கைது செய்யப்பட வேண்டும் என்பதையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் நாளை (15.10.2025) மாலை 5.00 மணியளவில் திருச்செந்தூர் ரோடு, காமராஜர் காலேஜ் அருகில் நடைபெறுகிறது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ ம. கணேசன் அவர்கள் தலைமையேற்கிறார்.

இந்நிகழ்வில் மாநில, மண்டல, மாவட்ட, நகர, வார்டு, முகாம் பொறுப்பாளர்கள் மற்றும் துணை நிலை அமைப்பினுடைய பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்யுமாறு ஆட்டோ ம. கணேசன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரா. செல்வக்குமார்
மத்திய மாவட்ட செய்தித் தொடர்பாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தூத்துக்குடி.