ஏழை, எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய வள்ளலாகவும், உலகத் தமிழர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்ற தலைவராகவும் திகழ்ந்த பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நினைவு தினம் வரும் 24.12.2025 புதன்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்த நினைவு தினத்தை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, வட்ட, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள உள்ளனர்.
தமிழகம் தலைநிமிரட்டும், தமிழர் வாழ்வு மலரட்டும் என்ற இலக்கை முன்வைத்து செயல்பட்டு வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், அனைவரும் இந்த நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.