திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் அனியாபரநல்லூர், புதுப்பட்டி, மீனாட்சிபட்டி கிராம மக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம் அனியாபரநல்லூர் TNDTA தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.



ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மற்றும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு பட்டா மாறுதல், மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ரத்னாசங்கர் வட்டார வளர்ச்சி அலுவலர் தாசன் மகளிரணி வேலம்மாள் கழக நிர்வாகிகள் ரவி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.