தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குலையன்கரிசல் ஊராட்சி கிராம
மக்களுக்கான "உங்களுடன் ஸ்டாலின்" சிறப்பு திட்ட முகாம் குலையன்கரிசல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மற்றும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஐகோர்ட் மகாராஜா பானு ஒன்றிய பொருளாளர் ரமேஷ் விஜயகுமார் தலைமைக் கழக பேச்சாளர் பொன்னரசு கிளைச் செயலாளர்கள் மங்களபாண்டி தனசேகர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
