ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் புதியம்புத்தூர் ஊராட்சியில் 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு அங்கன்வாடி மைய கட்டிடங்களை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திலகா வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் உதவி பொறியாளர் செல்வபாக்கியம் ஊராட்சி செயலாளர் உத்திரகனி தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி ஒன்றிய துணை செயலாளர் சிவன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன் வர்த்தகர் அணி முத்துக்குமார் இளைஞரணி தங்கதுரை பாண்டியன் சிறுபான்மை அணி ஞானதுரை நெசவாளர் அணி ஈசன் சுரேஷ் தங்கராஜ் செல்வம் ஆதிதிராவிடர் அணி மாடசாமி கருப்பசாமி மகளிர் அணி ஜெயா கிளைச் செயலாளர்கள் பூவலிங்கம் சற்குண பாண்டியன் பால. குருசாமி டேவிட் ஞானசேகர் மாரியப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

