தூத்துக்குடி மாநகராட்சி வரலாற்றுச் சிறப்புமிக்க தெப்பக்குளம் பகுதியில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகளின் போது திடீரென ஏற்பட்ட பள்ளம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில், முத்தாரம்மன், பத்திரகாளியம்மன், மாரியம்மன், சுந்தரவிநாயகர் உள்ளிட்ட பல ஆன்மீக தளங்களைச் சூழ்ந்தே இந்த 150 ஆண்டுகள் பழமையான தெப்பக்குளம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இங்கு தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
75 லட்சம் மதிப்பீட்டில் கிரானைட் கல் பதிப்பு, பொதுமக்கள் அமர்விட பெஞ்சுகள், சிறுவர் பூங்கா, மீன்கள் பாதுகாப்பு போன்ற மேம்பாட்டு பணி மாநகராட்சி சார்பில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்காக கடந்த ஒரு வாரமாக தெப்பக்குளத்தில் இருந்த நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் புதன்கிழமை இரவு தெப்பக்குளத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதி நடைபாதைகளில் சுமார் 6 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் உருவாகி, புதிதாக பதிக்கப்பட்ட கிரானைட் கற்கள் உடைந்து சுவர் இடிந்து விழும் சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், அருகில் இருந்த இரண்டு மின் மாற்றிகளும் சேதமடைந்து அந்தப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி இரவு நேரமே சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தெப்பக்குளத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விரிவான ஆய்வுக்குப் பிறகு, தெப்பக்குளத்தின் பாரம்பரியம், வடிவமைப்பு, பழமை ஆகியவை மாறாமல் பாதுகாப்பாக சீரமைப்பு நடைபெறும். பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தீயணைப்புத் துறையினரை உடனடியாக பணிக்கு நிறுத்தி அந்த பகுதிக்கு நுழைவு தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது,” என்றார்.
ஆய்வின்போது மின்வாரிய உதவி பொறியாளர் நாகராஜன் உதவி செயற்பொறியாளர் பிரேம் மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன் உதவி பொறியாளர் சரவணன் சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், ப்ரீத்திகா மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார் பகுதி செயலாளர் ரவீந்திரன் கவுன்சிலர் அந்தோணி பிரகாஷ் மார்ஷலின் போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், சீலன்ஸ்ருதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சியின் வரலாற்றுப் பெருமை மிக்க தெப்பக்குளம், நிபுணர்களின் பரிந்துரைகளின்படி விரைவில் பாதுகாப்பாகவும் அதன் பழமை காக்கப்பட்டவாறும் சீரமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
தெப்பக்குளத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளம் – அண்ணா பல்கலைக்கழக நிபுணர் ஆய்வுக்கு பின் பாரம்பரியம் காக்கப்படும் சீரமைப்பு: மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் கீதாஜீவன் – “ஆன்மீகமும் நடிப்பும் ரஜினியை சூப்பர் ஸ்டாராக நிலைநிறுத்தியது”
அடுத்த
தூத்துக்குடி முன்னேற்றத்தின் மறுபெயர்: செயலால் பதிலளிக்கும் மேயர் ஜெகன்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026