ரேஷன் அரிசி தட்டுபாடு மற்றும் ரேஷன் அரிசி கடத்தல் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு உணவு பொருள் பாதுகாப்பு பேரவை, சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பேச்சு முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்ததாவது :-
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மற்றும் துணை முதல்வரின் கனிவான பார்வைக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட ரேஷன் கடைகளில் ரேஷன் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு, ரேஷன் கடை ஊழியர்களால் ரேஷன் அரிசி இல்லை என்று கூறி விரட்டி அடிக்கப்படும் பொதுமக்கள்.
தமிழ்நாட்டு மக்கள் பட்டினியில் கிடக்க தென் மாவட்டங்களில் இருந்து பல நூறு வாகனங்களில் பல்லாயிரம் டன் ரேஷன் அரிசி கேரளாவிற்க்கு கடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டு ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தல் மாஃபியாக்களால் கடத்தப்படுவதால் தமிழகத்தில் ரேஷன் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அப்பாவி ஏழை பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு டிஜிபி, குடிமைப்பொருள் வழங்கள் குற்றப் புலனாய்வு பிரிவு, காவல் துறை உயர் அதிகாரிகள், மேலும் துறை சார்ந்த சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்று தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.
மு.பேச்சிமுத்து பிஏ.பிஎல்., வழக்கறிஞர், சமூக ஆர்வலர்,
தமிழ்நாடு உணவுப் பொருள் பாதுகாப்பு பேரவை. Cell :- 8012344000, 9943263509
தூத்துக்குடி
ரேஷன் அரிசி கடத்தல் பட்டினியில் தமிழ்நாடு! பசியாரும் கேரளா!! தமிழக அரசு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பேச்சு முத்து கோரிக்கை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வடக்கு ரத வீதி ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் கொடை விழா - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி கோரம்பள்ளம் ஸ்ரீ பிரித்தியங்கராதேவி ஆலயத்தில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026