தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மேய்ச்சல் தரை, அரசு புஞ்சை தரிசு, அரசு ராயத்துவாரி, அரசு அனாதீனம், அரசு உப்பு இலகாவுக்கு சொந்தமான நிலங்களை மீட்டெடுத்து தொழில் செய்யும் மக்களுக்கே வழங்க வேண்டி ஆகஸ்ட் 25 ம் தேதி தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ அரசடி பஞ்சாயத்து துப்பாசுபட்டி, அய்யனார்புரம் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் தரை புஞ்சை தரிசு அரசு உப்பு இலகாக்கு பாத்தியப்பட்ட நிலம் அனாதீனம் என்று வகைப்படுத்தப்பட்ட இடத்தை மீட்டெடுக்க வேண்டி வருகின்ற 25 ம் தேதி தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
 

அதுதொடர்பாக இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மாநிலத் தலைவர் சாமு காந்தி மனு அளித்திருக்கிறார். அதாவது
தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற திங்கள் கிழமை  மனுநீதி நாள் முகாமில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் ஐஏஎஸ் அவர்களிடம் தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் சார்பாக அதன் மாநில தலைவர் சாமு காந்தி, பெருமாள் மணி, சொக்கலிங்கம், அரிராம், ஜெயராமன் ஆகியோர் இன்று மனு அளித்திருக்கிறார்கள்.

அந்த மனுவில் தெரிவித்ததாவது வருகின்ற 25 ம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கீழ அரசடி பஞ்சாயத்து அய்யனார்புரம் கிராமத்தில் வைத்து அரசுக்கு சொந்தமான மேச்சல் தரை புஞ்சை தரிசு இந்திய உப்பு இலகாவுக்கு பாத்தியப்பட்ட மற்றும் அனாதீனம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்களை மீட்டெடுக்க வேண்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்

தமிழக அரசு 2001 ம் ஆண்டு அரசாணை எண் 186 படி கிராமங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் தரை என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்களில் எந்த விதமான பயன்பாட்டிற்கும் பயன்படுத்தக் கூடாது என்றும் மேய்ச்சல் தரை நிலங்கள் ஆடு, மாடு வளர்ப்புக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அரசாணை வெளியிட்டு இருக்கிறது. அந்த அரசாணைப்படி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் துப்பாசுபட்டி கிராமத்திலும் சுமார் 1000 ஏக்கர் நிலம் உள்ளது.

அந்த நிலங்கள் மேய்ச்சல் நிலங்களாகவும் புஞ்சை தரிசு நிலமாகவும் ராயத்துவரி  நிலம் அனாதீனம் என்றும் வகைப்படுத்தப்பட்ட நிலங்களாக உள்ளது. இந்த நிலங்களை இந்தப் பகுதியில் உள்ள சில தொழில் அதிபர்கள் உப்பு அளங்களாக மாற்றி உப்பு தொழில் செய்து நிலங்களை ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள். குறிப்பாக பெரும்பாலும் வெளி மாவட்டத்தில் இருந்து வந்த நபர்களுக்கும் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள்.

குஜராத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனமும் துப்பாசுப்பட்டி கிராமத்தில் உள்ள மேய்ச்சல் தரை நிலங்களை பல ஏக்கர் ஆக்கிரிப்பு செய்திருக்கிறது. இந்த நிலங்கள் அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பாக முன்பு இருந்த மாவட்ட ஆட்சியர் தலைவர் செந்தில்ராஜ் ஐஏஎஸ் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டு அவர்கள் உத்தரவுப்படி பல ஏக்கர் நிலங்கள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியாளர் அவர்கள் மூலமாக அளவீடு செய்யப்பட்டு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அதன் பின்பும்  தொழிலதிபர் தனபால் என்பவர் சுமார் 300 ஏக்கர் நிலங்களை ஆக்கிரிப்பு   செய்து உப்பளமாக பயன்படுத்தி வருகிறார். அரசுக்கு சொந்தமான சர்வே எண் 218 சர்வே எண் 127 மற்றும் சர்வே எண் 224 உள்ள நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து இருக்கிறார். அரசுக்கு சொந்தமான ராயாத்து வரி இடத்தை சுமார் 200 ஏக்கர் தனது குடும்ப உறுப்பினர் பெயரில் மோசடியாக பட்டா பெற்று இருக்கிறார். கடந்த மாதம் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற  சமபந்தி கூட்டத்திலும் வட்டாட்சியர் இடம் மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பல்வேறு முறை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் மனு கொடுக்கப்பட்டும் இன்னும் இவர் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வில்லை எனவே உடனடியாக அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை இந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டி வருகின்ற 25 ம் தேதி தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பாக அய்யனார் புறம் கிராமத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறு என்று மாநில தலைவர் சாமு காந்தி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் இன்று அளித்த மனுவில் தெரிவித்து இருக்கிறார்.