தூத்துக்குடியில் பெண்கள் இணைப்புக் குழு 30 வது மாநில மாநாடு பொதுக்கூட்டம் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் இன்று மாலை நடைபெற்றது.

பெண்கள் இணைப்புக் குழு 30 வது மாநில மாநாடு பொதுகூட்டமானது தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் இன்று மாலை நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு பெண்கள் இணைப்புக் குழு மாநில தலைவி ஷீலு தலைமை தாங்கினார்.
பெண்கள் இணைப்புக் குழு கன்னியாகுமரி லிட்வின் மேரி வழி நடத்துனர் செய்தார். பெண்கள் இணைப்புக் குழு தூத்துக்குடி மாவட்டம் அருள்செல்வி வரவேற்புரை நிகழ்த்தினார். பெண்கள் இணைப்புக் குழு நாகர்கோவில் உஷா, திருவள்ளுவர் கமலா, மதுரை ஜோதி, திருவள்ளுவர் சகாயமேரி, தென்காசி மாவட்டம் பொன்னுத்தாய், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
பெண்கள் தென்காசி மாவட்டம் சுலோச்சனா நன்றியுரை நிகழ்த்தினார். நாளை காலை 9 மணியளவில் கருத்துரை அமர்வு, காலை 11 மணியளவில் விவாத மேடை, மற்றும் எதிர்காலத்திட்டம் குறித்து உறுதி மொழி போன்ற நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது.

