தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் கமிட்டி (INTUC) சார்பாக, பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும், சமீபத்தில் கோவையில் இடம்பெற்ற கூட்டு பாலியல் வன்முறை சம்பவத்தையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் கடுமையாகக் கண்டித்தும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் வரும் 7ஆம் தேதி நவம்பர் 2025, மாலை 5 மணிக்கு தூத்துக்குடி VVD சிக்னல் அருகில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும், சமூகத்தில் பெண்களின் மரியாதை மற்றும் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியினரும், தொழிற்சங்க காங்கிரஸ் உறுப்பினர்களும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.
பெண்கள் மீது வன்முறை நிகழ்வுகள் தடுக்கப்பட்டு, பாதுகாப்பான சமூகம் உருவாக வேண்டும் என்பதே இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய குறிக்கோள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவன்,
பெருமாள் சாமி கதிர்வேல்
மாநில பொதுக்குழு உறுப்பினர் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
மாநில பொதுச் செயலாளர் – தமிழ்நாடு INTUC
தூத்துக்குடி
பெண்கள் பாதுகாப்பே நோக்கம் – தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி மாபெரும் கண்டனக் குரல் எழுப்புகிறது!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“பசுமை தமிழ்நாட்டுக்காக புதிய சட்டம் அவசியம்!” — முதலமைச்சருக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் எஸ்.ஜே. கென்னடியின் கோரிக்கை!!
அடுத்த
தூத்துக்குடி அன்னை தெரசா நகர், ராஜீவ் நகர் பகுதிகளில் புதிய வடிகால் பணிகள் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026