திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்கவும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் அவர்களின் உத்தரவின்படியும், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் அவர்களின் ஆலோசனையின் பேரிலும், தூத்துக்குடி மாநகராட்சி பிரையன்ட் நகர் பகுதி 48வது வார்டு, பாகம் 202 (262)ல் “என் வாக்கு சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு வட்ட செயலாளர் நவநீதன் தலைமை தாங்கினார். மாநகர கவுன்சிலர் ராஜேந்திரன், BDA ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. BLA2 லோகநாதன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் “என் வாக்கு சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” பகுதி பொறுப்பாளரும், வழக்கறிஞருமான ரூபராஜா, பாக முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்காளர்களை அணுகும் முறைகள், கட்சியின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வழிமுறைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் கூட்டத்தில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சி.என். அண்ணாதுரை, மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், வட்ட பொருளாளர் நடராஜன், பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜான்சன் கிங்ஸ்லி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 202 (262) பாகத்தைச் சேர்ந்த பூத் கமிட்டி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு திமுகவின் வெற்றிக்கான உறுதியை வெளிப்படுத்தினர்.
இந்தக் கூட்டத்தின் மூலம் 48வது வார்டில் வாக்குச்சாவடி வாரியாக தேர்தல் பணிகளை மேலும் தீவிரப்படுத்தி, திமுகவின் வெற்றியை உறுதி செய்வோம் என்ற உற்சாகமும் உறுதியும் வெளிப்பட்டது.