தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முன்னாள் மாணவர்கள், வாக்கிங் நண்பர்கள் மற்றும் பாய்ஸ் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு கபாடிப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.


இந்த போட்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழுத் தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு. ஜி.வி. மார்கண்டேயன் அவர்கள் தொடங்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். இளைஞர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி ஒழுக்கம், ஒற்றுமை, வீர உணர்வு வளர்வதாக அவர் தெரிவித்தார்.


நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய தேர்தல் பார்வையாளர் சோலையப்பன், வார்டு செயலாளர் சங்கரலிங்கம், வார்டு உறுப்பினர் வேல்ஈஸ்வரி, அன்பில் நாராயணமூர்த்தி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு போட்டிகளை உற்சாகமாகக் கண்டு களித்தனர்.