தூத்துக்குடி திருமந்திரநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டு ஐப்பசி மாத திருவிழா ஆன்மிக மகிழ்வுடன் நடைபெற்று வருகிறது.
இன்று (13.11.2025) காலை நடைபெற்ற திருத்தேர் ரதாரோஹணம் மற்றும் தேரோட்ட பவனி விழாவில், தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி வசந்தி திருத்தேரை வடம்பிடித்து பவனியை தொடங்கி வைத்து விழாவை சிறப்பாக துவக்கி வைத்தார்.
இந்த பவனியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர் மு.வள்ளிநாயகம், தக்கார் தமிழ்ச்செல்வி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து சிறப்பு செய்தனர்.
பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு “ஓம் நமஃ சிவாய” என முழங்கினர். தீபாராதனை வழிபாடுகளில் ஈடுபட்டு இறை அருளைப் பெற்றனர்.
திருவிழாவின் நிறைவாக வரும் நவம்பர் 15 (சனிக்கிழமை) அன்று மாலை 8.00 மணி முதல் 9.00 மணிக்குள் உத்திர நட்சத்திரம் – ஏகாதசி கூடிய சுபநாளில், ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
பெரும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு இறை அருளைப் பெற விழா நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.
தூத்துக்குடி
திருமந்திரநகர் ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருத்தேர் விழா: தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி வசந்தி தேர் வடம்பிடித்து தொடங்கி வைத்தார்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“புனிதர்களின் நம்பிக்கைச் சாட்சி — தூத்துக்குடி மறைமாவட்டம் முழுவதும் நினைவேந்தல் விழா”
அடுத்த
“ஹாக்கி உலகக் கோப்பை கோவில்பட்டியில் களம் கண்டது!” — கோப்பையை அறிமுகம் செய்தார் கனிமொழி கருணாநிதி எம்.பி.!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026