தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்று வரும் வீரர்கள் சர்வதேச அளவிலான ஸ்குவாஷ் போட்டியில் 2 பதக்கங்கள் வெனஂறு சாதனை படைத்துள்ளனர்.
சர்வதேச அளவிலான உயர் தரவரிசை ஸ்குவாஷ் இந்தியன் ஜூனியர் ஓபன் போட்டி 2025 ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் 11 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஹரி பாலா தங்க பதக்கமும் மற்றும் 15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கௌஷிகா வெண்கல பதக்கமும் வென்று சாதணை படைத்தனர்.
கேம்ஸ்வில் வீரர்கள் அனைத்து சர்வதேச மற்றும் தேசிய ஸ்குவாஷ் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பாரட்டுகள் குவிந்து வருகிறது. போட்டியில் வெற்றி பெற உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் சண்முக சுந்தரம் மற்றும் பெற்றோர்களுக்கு கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாகம் சார்பில் ரைபின் தார்சியஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தூத்துக்குடி
சர்வதேச அளவிளான ஸ்குவாஷ் போட்டியில் தூத்துக்குடி கேம்ஸ்வில் மாணவர்கள் சாதனை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மறை மாவட்டம் தாளமுத்துநகர் பங்கில் அமைந்துள்ள ஆரோக்கியபுரம் பாதுகாவலர் புனித ஆரோக்கிய நாதர் ஆலய 105 ம் ஆண்டு திருவிழா கொடியேற்றுத்துடன் தொடங்கியது!!
அடுத்த
இராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய திருவிழா தேர்பவனி நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026