தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ் தலைமையில் மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பொியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
     
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க "ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சோ்க்கை வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் தலைமை கழகம் உத்தரவிற்கேற்ப சிறப்பாக பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தொிவித்துக்கொள்கிறேன்.

"உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களின் மூலம் எல்லா தரப்பு மக்களும் மனுக்கள் அளித்து அதற்கு உடனடி தீர்வும் மற்ற மனுக்களுக்கு எந்த வீதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எந்த எந்த துறை சாா்ந்த மனுக்கள் வந்துள்ளது. என்ற விபரங்களை தமிழகம் முழுவதும் கேட்டறிந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்காக பணியாற்றி வருகிறாா். அதே போல் இப்போது மருத்துவ முகாமும் நடைபெறுகிறது. அதிலும் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடைகின்றனா்.

"ஓரணியில் தமிழ்நாடு" உறுப்பினர் சேர்க்கைக்கு பொதுமக்கள் முழு ஆதரவு கொடுத்து திமுகவிற்கு துணையாக நிற்கின்றனா். அதே போல் கூட்டணி கட்சி தலைவர்களும் முதலமைச்சருக்கு துணையாக இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி ஊர் ஊராக சென்று உலறி கொண்டு திாிகிறாா். பொறுத்துக் கொள்ள முடியாமல் எல்லா துறைகளிலும் தமிழகம் வளர்ச்சியடைந்து இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநில மாக ஒன்றிய அரசின் நெருக்கடிக்கு மத்தியிலும் திகழ்கிறது என்றால் அது மிகப்பொிய வரலாற்று சாதனையாகும்.

நமது மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் அனைவரும் ஓற்றுமையுடன் பணியாற்றி வெற்றி பெற இன்றிலிருந்தே களப்பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். 2 வது முறையாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அாியணையில் ஏற பணியாற்றுங்கள் என்று பேசினாா்.
      
கடந்த 14 வருடங்களில் இல்லாத அளிவிற்கு திமுக ஆட்சியில் 2024 - 25 ம் ஆண்டு 11.19 எனும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பெற்று தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பெற்றிருப்பதையடுத்து இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மாபெரும் தொழில் நகரமாக தூத்துக்குடிக்கு மின்வாகன உற்பத்தியில் முன்னோடியாக விளங்கும் வின்பாஸ்ட் மின்சார காா்தொழிற்சாலையை பல்லாயிரம்கோடி முதலீட்டில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பினை அளித்திடும் வகையில் பெற்று தந்த திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது .

கடந்த ஜீலை 1 ம் தேதி சென்னையில் தொடங்கிய "ஓரணியில் தமிழ்நாடு" திட்டத்தை நான்காம் தேதி வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் முன்னெடுத்து மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி இன்று தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒலிக்கும் முழக்கமாக உருவெடுத்துள்ளது. மாணவா்கள் இளைஞர்கள் பெண்கள் மற்றும் முதியோா் என அனைத்து தரப்பினர் அன்பை பெற்றவராக திகழும் முதல்வருக்கு நன்றி தொிவிப்பது உள்பட நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா்கள் ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளா் ரவீந்திரன், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமாா், சிறுபான்மை அணி துணைச் செயலாளர் பொன்சீலன், தொகுதி பொறுப்பாளர்கள் இன்பாரகு, பெருமாள், கணேசன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், பிரமிளா, நகா் மன்ற தலைவர் கருணாநிதி, மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் வக்கீல் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அபிராமிநாதன், கவிதாதேவி, மதியழகன், குபோ்இளம்பாிதி, சீனிவாசன், அசோக், ராமலட்சுமி, ரமேஷ், ஆபிரகாம், பொதுக்குழு உறுப்பினர்கள் கஸ்தூாிதங்கம், ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ராஜா, ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், சின்னப்பாண்டியன், காசி விஸ்வநாதன், சுப்பிரமணியன், ராமசுப்பு, மும்மூா்த்தி, செல்வராஜ், முருகேசன், இம்மானுவேல், ஜெயக்கண்ணன், ராதாகிருஷ்ணன், அன்புராஜன், சின்னமாாிமுத்து, கருப்பசாமி, நவநீதகண்ணன், பேரூா் செயலாளர்கள் வேலுச்சாமி, பாரதிகணேசன், மருதுபாண்டி, கிருஷ்ணகுமாா், சுரேஷ்கண்ணன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமாா், மேகநாதன், ராமகிருஷ்ணன், ஜெயக்குமாா், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தா், துணை அமைப்பாளர் ரவி, கோவில்பட்டி நகர செயலாளர் சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, அல்பட உள்பட பலர் கலந்து கொண்டனா்.