கோவில்பட்டியை மையமாகக் கொண்டு நீண்டகாலமாக மக்களின் கனவாக இருந்து வந்த வந்தே பாரத் ரயில் நிறுத்தம் இன்று நனவாகியுள்ளது. இது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் (ம.தி.மு.க.) அதன் தலைவர் வைகோ அவர்களுக்கும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ, MBA., MP. அவர்களுக்கும் பெரும் வெற்றி நாளாகும்.
சென்னை எக்ஸ்பிரஸ் – திருநெல்வேலி வந்தே பாரத் (வண்டி எண் 20665/20666) ரயில் இனி கோவில்பட்டியிலும் நிறுத்தம் பெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை இந்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 9, 2025 (புதன்கிழமை) முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக ம.தி.மு.க. தலைவர் வைகோ அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனை முன்னெடுத்து, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ அவர்கள் மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து, கோவில்பட்டியில் வந்தே பாரத் நிறுத்தம் வழங்க வேண்டி மனு அளித்ததுடன், பல்வேறு கட்டங்களில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியும் முயற்சியுடன் செயல்பட்டார்.
அதன் விளைவாக இன்று கோவில்பட்டி மக்களின் கனவு நனவாகியுள்ளது. இதற்காக (25.09.2023) அன்று ம.தி.மு.க. சார்பில் கோவில்பட்டியில் பொதுமக்களுடன் இணைந்து பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் மற்றும் கோரிக்கை பேரணி நடத்தப்பட்டது. அந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கோவில்பட்டியில் வந்தே பாரத் நிறுத்தம் வேண்டும் என ஒருமித்த கோரிக்கை எழுப்பினர்.
இந்த மக்கள் இயக்கம் மத்திய அரசையும் ரயில்வே அமைச்சகத்தையும் பாதித்து இன்று வெற்றியாக மாறியுள்ளது. இந்த மகிழ்ச்சியளிக்கும் வெற்றிக்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக தூத்துக்குடி மாவட்டம் சார்பில் மக்களின் சார்பாக ம.தி.மு.க. தலைவர் வைகோ அவர்களுக்கும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனை கோவில்பட்டிக்கும், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது. மறுமலர்ச்சி தி.மு.க. தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி
கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நிறுத்தம் – ம.தி.மு.க.வின் வரலாற்றுச் சாதனை! வைகோ – துரைவைகோ முயற்சியில் மக்களின் கனவு நனவானது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தேர்தல் ஆணையத்தை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினரின் மாபெரும் கையெழுத்து இயக்கம்!
அடுத்த
தூத்துக்குடியில் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026