விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி  ஒட்டப்பிடாரம் ஒன்றியத்தில் பல்வேறு பகுதியில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர்கள் எம்.ஜி.ஆர் நகர், கணபதி நகர், பூப் பாண்டிபுரம், VMS நகர், சின்னக்கண்ணுபுரம், மகிழ்ச்சி புரம், இந்திரா நகர் பகுதிகளில் கோவில்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை சோட்டையன் தோப்பு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் முன்பாக தொழிலதிபர் ஜெயம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


தொடர்ச்சியாக வட்ட கோயில், அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுண்டானா, 2 ம் கேட், ரத வீதி, சத்திரம், 1 ம் கேட், மட்டக்கடை திரேஸ்புரம் வழியாக சங்கு முக விநாயகர் கடற்கரையில் விஜர்சனம் தலைமை சிபு ஒட்டப்பிடார ஒன்றிய தலைவர் சிறப்பு அழைப்பாளர் K.S. ராகவேந்திரா மாவட்டச் செயலாளர் ஒட்டப்பிடார ஒன்றிய பொறுப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஒன்றிய நிர்வாகிகள் மாதவன், சுரேஷ், ராஜா, சங்கர் முத்து, துரை புருசோத்தமன், சரவணன், வெங்கடேஸ்வரன், சதீஷ், ஆகியவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.