தூத்துக்குடியில் அதிமுக வர்த்தக அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி வாட்டர் டேங்க் அருகில் இன்று (02.04.2025) காலை நடைபெற்றது.
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தூத்துக்குடி மாநகர் முழுவதும் நீர் மோர் பந்தல் அமைக்கும் பணி பல்வேறு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், மற்றும் மாநகராட்சி சார்பில் என பல்வேறு அமைப்புகளின் சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகத்தை தீர்த்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக அதிமுக மாவட்ட வர்த்தக அணி சார்பில் நீர் மோர் பந்தல் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரை சிங், 18 வது வார்டு வட்ட பிரதிநிதி, இளைஞர் பாசறை மேற்கு பகுதி தலைவர் ஆறுமுக நயினார் ஆகியோரின் ஏற்பாட்டில் திறக்கவிருந்த நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து சிறப்பு செய்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் யூ.எஸ். சேகர், மத்திய முன்னாள் கூட்டுறவு தலைவர் ராஜ கோபால் முன்னாள் கவுன்சிலர் கூட்டுறவு சேர்மன் எட்வின் பாண்டியன், மீனவர் அணி செயலாளர் அகஸ்டின், போக்குவரத்து துறை மண்டல நிர்வாகி சண்முக ராஜ், அதிமுக விபத்து பிரிவு செயலாளர் முருகன், முன்னாள் விரைவு போக்குவரத்து துறை டெரன்ஸ், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து துறை நிர்வாகிகள் பெலிக்ஸ், ராஜேந்திரன், சங்கர், 47 வது வார்டு வட்ட செயலாளர் சகாய ராஜ், டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க தலைவர் விஜய் குமார், மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
அதிமுக மாவட்ட வர்த்தக அணி சார்பில் நீர் மோர் பந்தல் - முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் எம்.பி. யும்., மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோவின் 53 வது பிறந்தநாள் - பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!
அடுத்த
சமக தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. எர்ணாவூர். நாராயணன் ஆணையின்படி பொதுமக்களுக்கு தாகம் தீர்க்க தர்பூசணி வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026