தூத்துக்குடி மாவட்டத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்களின் தலைமையில் நடந்தது.
தமிழ்நாடு காவல்துறையின் வழிகாட்டுதலின்படி நடைபெறும் இக்கூட்டத்தில், காவல் நிலையங்களில் முன்பே புகார் அளித்த 5 பேரும், புதியதாக மனு அளிக்க வந்த 56 பேரும் கலந்து கொண்டனர். மொத்தம் 61 மனுதாரர்கள் இன்று தங்கள் பிரச்சினைகளை நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முன்வைத்தனர்.
மக்கள் முன்வைத்த ஒவ்வொரு குறையையும் கவனத்துடன் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உடனடி விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புதன்கிழமைகளில் நடைபெறும் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், காவல் நிலையங்களில் வழங்கிய புகார் தொடர்பான விசாரணையில் திருப்தி அடையாதவர்கள் நேரடியாக மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் புதன்கிழமைகள் மக்கள் குறைகள் கேட்கும் நாளாக மாறின!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் அரசியலமைப்பு தின உறுதிமொழி நிகழ்வு!!
அடுத்த
கோவில்பட்டியில் சமூக நீதி பயணம்: “ஒடுக்கப்பட்டோரின் அரணாக முதல்வர் ஸ்டாலின்” – ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026