தூத்துக்குடி விகாசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலவாழ்வுச் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கம் இணைந்து ஒருங்கிணைத்த உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு உரையாற்றினார். மாற்றுத் திறனாளிகள் சமூகத்தின் முன்னேற்றம், அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு மேற்கொண்டு வரும் திட்டங்களை அவர் விளக்கினார். தொடர்ந்து பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலவாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் மருத பெருமாள், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் செல்வகுமரன் மற்றும் சங்கத்தின் கிளை அமைப்பு தலைவர்கள் அற்புதராஜ், எப்போதும் வென்றான் மொட்டையசாமி, மேலக்கரந்தை அய்யனார், மேல கூட்டுடன்காடு ராமகிருஷ்ணன், செக்காரக்குடி ஆறுமுகம், புதுக்கோட்டை பொன்ராஜ், மேலத் தட்டப்பாறை சின்னத்துரை, குமரட்டியாபுரம் பிச்சாண்டி, புதியம்புத்தூர் தமிழ்செல்வி, வேம்பார் பெரியசாமி, கோவில்பட்டி முத்து மாடசாமி, ஏரல் சுல்தான், குலசேகரப்பட்டினம் கமல் ஜவகர், கிருஷ்ணராஜபுரம் அந்தோணி ராஜ், தாளமுத்து நகர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் தூத்துக்குடி காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கத்தின் தலைவர் பேச்சிமுத்து, துணை தலைவர் கமல் தனசேகர், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் சின்னதுரை மற்றும் சகா கலை குழுவைச் சேர்ந்த முனைவர் சகா. சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த விழா மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் விதமாக நடைபெற்றது.
தூத்துக்குடி
அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பில் தூத்துக்குடியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா - நலத்திட்ட உதவிகள் வழங்கல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழா: தூத்துக்குடியில் ஐஎன்டியுசி சார்பில் பெருமாள்சாமி மரியாதை!!
அடுத்த
எம்எல்ஏ G.V.மார்கண்டேயன் தொடங்கி வைத்த கீழச்செய்த்தலையில் 10,000 பனை விதைகள் நடும் பசுமை இயக்கம்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026