ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த முகாமில் தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் ஆகியோர் கலந்து கொண்டு முகாமில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறித்து பார்வையிட்டனர்.

முகாமில் பொதுமக்களுக்காக பல்வேறு சிகிச்சைகள், உடல் பரிசோதனை, கண் பரிசோதனை, இரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.

அத்துடன், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. பயனாளிகளுக்கு அரசு காப்பீட்டு அட்டைகள் மற்றும் அடையாள அட்டைகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மக்கள் நலனை மையமாகக் கொண்டு தமிழக அரசு மேற்கொண்டு வரும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் கிராமப்புற மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாக குறிப்பிடப்பட்டது.