அக்டோபர் 16, 2025 மாலை 6 மணியளவில் தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல முத்தையாபுரம் பகுதியில் அறிவிக்கப்படாத தொடர்ச்சியான மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

இந்த நிலையில், புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் அவர்கள் சார்பிலும், முத்தையாபுரம் வட்டார பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பாகவும், மின்வெட்டு பிரச்சனை குறித்து கைபேசி மற்றும் வாட்ஸ் அப் மூலமாக அரசு மற்றும் மின்சாரத் துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

அதன் பேரில், முத்தையாபுரம் உதவி செயற்பொறியாளர் தெற்கு பகுதி அதிகாரி அவர்களின் தலைமையில், மின் ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு குடியிருப்பு பகுதிகளுக்கு ஏற்பட்ட மின் தட்டுப்பாட்டை சரிசெய்ததுடன், தெருவிளக்குகளும் மீண்டும் இயங்கச் செய்யப்பட்டன.

இந்த விரைவான நடவடிக்கைக்கு மின்சாரத் துறை அதிகாரிகளுக்கும், உதவி செயற்பொறியாளர் தெற்கு பகுதி அதிகாரி அவர்களுக்கும், மின் ஊழியர்களுக்கும் புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்டம் செய்தி பிரிவும், முத்தையாபுரம் வட்டார பொதுமக்களும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.