தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் மனப்போக்கை எதிர்த்து, திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தளபதி அவர்களின் முன்னெடுப்பின் படி “ஓரணியில் தமிழ்நாடு” என்ற கோஷத்தினை வலியுறுத்தும் வகையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை (20.9.2025) மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம், V.V.D. சிக்னல் அருகில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பி. கீதா ஜீவன், M.Com., B.Ed., அவர்கள் தலைமை வகிக்கிறார்.

முன்னிலையில் தலைமை செயற்குழு உறுப்பினர், G.V. மார்க்கண்டேயன், M.L.A, மாநகர திமுக செயலாளர் S.R. ஆனந்த சேகரன், வணக்கத்திற்குரிய மேயரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

சிறப்புரையை கலைமாமணி B. ஆண்டாள் பிரியதர்ஷினி மற்றும் தலைமைக் கழகப் பேச்சாளர் சரவெடி G. சரத் பாலா வழங்கவுள்ளனர். இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர ஒன்றிய, பகுதி, வட்ட, ஊராட்சி கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாநில, மாவட்ட, மாநகர மற்றும் பகுதி நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.

அனைத்து கழக உடன்பிறப்புகளும் பெருவாரியாக கலந்து கொண்டு, கழகத் தலைவர் முன்னெடுத்த “ஓரணியில் தமிழ்நாடு” என்ற இயக்கத்தை வலுப்படுத்துமாறு மாவட்ட திமுக செயலாளர் பி. கீதா ஜீவன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.