தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் எழுந்த கோரிக்கையைத் தொடர்ந்து, மேயர் ஜெகன் பெரியசாமி கிறிஸ்து அரசு நகர் பகுதிக்கு சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்பகுதி மக்களுடன் நேரடியாக உரையாடியபோது, குடியிருப்பு பகுதியில் பட்டா தொடர்பான சில பிரச்சனைகள் இருப்பதை அவர்கள் தெரிவித்தனர். மக்களின் கோரிக்கையை கவனமாக கேட்ட மேயர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனையின்படி, “மக்களின் நலனுக்காக தமிழக அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்” என்று உறுதியளித்தார்.
இவ்வாய்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் ஆகியோர் உடன் இருந்தனர்.
மக்களின் பிரச்சனையை நேரில் சென்று கேட்டறிந்து, உடனடி தீர்வுகளுக்கான நடவடிக்கையை முன்னெடுத்த மேயரின் இந்த பார்வை, அப்பகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
“குடிமக்களுக்கு எப்போதும் துணை நிற்கும் தமிழக அரசு” – கிறிஸ்து அரசு நகர் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மட்டக்கடையில் வடிகால் கல்வெட்டு அமைக்க நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
அடுத்த
“ஓரணியில் தமிழ்நாடு” – தூத்துக்குடியில் நாளை மாபெரும் பொதுக்கூட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026