தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கிய உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை மண்டல வாரியாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக இன்று மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மக்களின் குறைகளை நேரடியாக கேட்டு உடனடி தீர்வுகள் வழங்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த முகாமில் மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் சமூக பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். முகாமில் மண்டல தலைவர் அன்னலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், சந்திரபோஸ், பொன்னப்பன், ராமர், ஜான் சீனிவாசன், கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முகாமின் போது பொதுமக்களிடமிருந்து வந்த கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றை விரைவாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தூத்துக்குடி
மக்களின் மனம் கேட்கும் முகாம் – தூத்துக்குடியில் தொடங்கியது மேற்கு மண்டலத்தில்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்வளர்ச்சித் துறை நடத்திய கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் – வெற்றியாளர்களுக்கு பரிசும் மாநில போட்டிக்கு வாய்ப்பும்!
அடுத்த
54-ஆவது ஆண்டு விழா முன்னிட்டு – தூத்துக்குடியில் அ.தி.மு.க.வின் நலத்திட்டங்கள் தொடக்கம்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026