தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு, தோழமைக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும்,
தமிழ்நாடு அரசியல் உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் இஸ்லாமியர்களுக்கு 7% சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தியும்,
அமெரிக்கா இந்திய இறக்குமதி பொருள்களுக்கு 50% வரி விதிப்பை கண்டித்தும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் கப்பலோட்டிய தமிழர் பக்கீர் முஹம்மது திடலில் வைத்து நடத்த முடிவு செய்யப்பட்டு அது சம்பந்தமான கலந்த ஆலோசனை கூட்டமானது இன்று மாலை தெற்கு புது தெருவில் உள்ள சமுதாய நலக்கூடடத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர்கள் கிதர் பிஸ்மி, ஜாஷீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். AICCTU மாநில தலைவர் அம்ஜத் செய்யது அலி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட ஊடக பிரிவு அஜ்மல் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் முஹம்மது குட்டி நன்றியுரை ஆற்றினார்.
கூட்டத்தில் நஜீப், 2T பாபு, MIS மூசா, சாதிக் பாட்சா உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
