தூத்துக்குடி கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டா் இளம்பகவத், தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரைமுறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 340 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 23 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் ஆட்சியில் கிடைக்கிறது. ஓரணியில் தமிழ்நாடு என்றும் கூறப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி பத்திாிகையாளா்களின் நீண்டநாள் கோாிக்கையான வீட்டுமணை பட்டா இன்று வரை வழங்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவது பத்திாிகையாளா்களின் வேதனை குரலாக ஓலிக்கிறது. மாவட்ட நிர்வாகம் இதையும் கருத்தில் கொண்டு விரைவாக அதை நிறைவேற்றி கொடுக்க வேண்டும். என்று கேட்டுக்கொள்கின்றனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் தமிழரசி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைகளையும் நாள் கூட்டம் நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு தோழமை கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி போல் பேட்டை கீதா மெட்ரிக்பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026