தூத்துக்குடி காங்கிரஸ் கட்சியின் சார்பில் வருகின்ற ஆகஸ்ட் 6 ம் தேதி புதன்கிழமை மாலை 4 மணியளவில் பாளையங்கோட்டை ஆணவ படுகொலை போன்ற சம்பவங்களை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வர் இந்த ஆணவ படுகொலை சிறப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தாழ்மையுடன் கோரிக்கையை வைத்து இந்த கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெறும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது என்று செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவன ஈர்ப்பு கூட்டத்திற்கு ராஜாராம் (முன்னாள் எஸ்சி, எஸ்டி மாவட்ட தலைவர்) தலைமை வகிக்கிறார். T. ஜெயக்கொடி (அகில இந்திய ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர்) முன்னிலை வகிக்க இருக்கிறார். T. டேவிட் பிரபாகரன் (வர்த்தக காங்கிரஸ் தூத்துக்குடி மாவட்ட தலைவர்) தங்கராஜ் (தெற்கு மண்டல தலைவர்) இக்னேஷியஸ் (மாநகர காங்கிரஸ் பொது செயலாளர்) ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கின்றனர். கவன ஈர்ப்பு உரையை K. பெருமாள் சாமி (தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்) ஆற்றுகிறார்.

நன்றியுரையை மாநில எஸ்டி பிரிவு செயலாளர் முனியசாமி நிகழ்த்துகிறார். இந்திய தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி சார்பில் நடைபெறும் கவன ஈர்ப்பு கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியை சார்ந்த அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.