தூத்துக்குடியில் மறுமலர்ச்சி திமுக நிர்வாகிகள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இன்று மாலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.எஸ். ரமேஷ் தலைமை வகித்தார்.

மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ், தெற்கு மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச் சாமி, மாநில வெளியீட்டு அணி செயலாளர் நக்கீரன், வடக்கு மாவட்ட அவைத் தலைவர் பேச்சி ராஜ், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ரஞ்சன், மதிமுக வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் தெய்வேந்திரன், எல்.எஸ். கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மதிமுக மாநில துணை பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
நிர்வாகிகள் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகஸ்ட் 9 தேதி தூத்துக்குடிக்கு வருகையையொட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது, அதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் ஆகஸ்ட் 9 தேதி மாலை பாளை ரோடு விவிடி சிக்னல் பேருந்து நிறுத்தம் அருகில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் மதிமுக பொது கூட்டத்தில் வைகோ சிறப்புரை ஆற்ற இருக்கிறார் அதற்கு வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் திரளானோர் கலந்து கொள்வது குறித்தும், வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ம் தேதி திருச்சியில் நடைபெறும் அறிஞர் அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நகர மற்றும் ஒன்றியம் சார்பில் எத்தனை வாகனங்களில் கலந்து கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட முன்னாள் அவைத் தலைவர் குரு மத்தேயு, கலை இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன், நிர்வாகிகள் அனல் செல்வராஜ், நகர செயலாளர் பால்ராஜ், தொம்மை, முத்துச் செல்வன், காலாங்கரை கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் விளாத்திகுளம் மணி, பலவேச பாண்டியன், சரவணன், வள்ளி முத்து, காளிச்சாமி, வீரபாண்டிய சரவணன், ஜெயக்கொடி, பாண்டியன், பி.எஸ். முருகன், மாரிச்சாமி, ராஜ்குமார், செந்தூர் பாண்டி, கோடை இடி ராமசந்திரன், வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், இளைஞரணி செயலாளர்கள் சரவணப்பெருமாள், பாலசுப்பிரமணியன், எம்எல்எப் நிர்வாகிகள் கஜேந்திரன், காசி, குமார், கார்த்திக், மாரிமுத்து, பொன்ராஜ் , வேம்பன், மதிமுக பிரதிநிதிகள் பால்ராஜ் நாயக்கர், பொய்யா மொழி, ஜெயக்குமார், உட்பட மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக தூத்துக்குடியில் ஆகஸ்ட் 9 ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறக்கூடிய இடத்தை மாநில துணை பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாநகர செயலாளர் முருகபூபதி நன்றியுரை நிகழ்த்தினார்.
