இந்து முன்னணி ஒட்டப்பிடாரம் ஒன்றிய செயற்குழு கூட்டம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர். APJ அப்துல் கலாமின் 10 ம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிப்பு தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து (27/07/2025) காலை 10 மணி முதல் 1 மணி வரை ஒன்றிய தலைவர் C.P. சிபு தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாவட்டத் தலைவர் S. செந்தில்குமார் ஜி மற்றும் மாவட்ட நிர்வாகி S.P. சிவலிங்கம் K.S. ராகவேந்திரா S. வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செயற்குழுவில்
ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் நியமனம் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக நம்முடைய பாரத பிரதமர் திறந்து வைத்த சர்வதேச விமான நிலையத்திற்கு மகாகவி பாரதியார் அவர்களின் பெயரை மத்திய அரசு வைக்க வேண்டும் என்று இந்த செயற்குழுவில் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 2
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தில் பல இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் பல இடங்களில் ஜெப கூடங்கள் மற்றும் மதபிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது இதனை மாவட்ட நிர்வாகமும் மற்றும் காவல் துறையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்த செயற்குழு கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் மாதவன், சங்கர், முத்து, மாரியப்பன், புருஷோத்தமன், இஸ்ரவேல், பாண்டியன், ராஜா, பட்ராஜ், சதீஷ்குமார், வெங்கடேஸ்வரன், லிங்க குரு மற்றும் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
