இந்தியாவின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் நான்கு தூண்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஊடகத் துறையும் ஒன்றாகும் ஒன்றிய அரசால் ஆர்.என்.ஐ அங்கீகாரம் பெற்று எல்லா மாநிலங்களிலும் மாநில மொழிகளுக்கு ஏற்ப நாளிதழ் பருவ இதழ் தொலைகாட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த துறையை சேர்ந்தவர்களுக்கான அதிகாரத்தை மாநில அரசு செய்தி துறையின் மூலம் வழங்கி வருகிறது. அதில் தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை சென்னை தலைமை செயலகத்தில் இயக்குநர் கையெழுத்திட்ட அங்கீகார அட்டையும் மாவட்ட அளவில் ஆட்சியர் கையெழுத்திட்ட அங்கீகாரம் அட்டையும் வழங்கி வந்தனர்.
திமுக அரசு பொறுப்பேற்ற பின் 2024 ம் ஆண்டு சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி ஊடகத்துறையினருக்கு வழங்குவது போல் தமிழகம் முழுவதும் வழங்கப்படும் என்று அறிவித்தனர். ஆனால் கடந்த இரண்டு வருடமாக அந்த உத்தரவு முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இதனால் 80 சதவீத ஊடகத் துறையினர் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து சென்னை பத்திரிகையாளர் கூறுகையில் தமிழகத்தில் நடைபெறுகின்ற திமுக ஆட்சிக்கு உண்மையாக பக்க பலமாக இருப்பது சிறிய கட்சிகள் தான். அதேபோல் நடுத்தர சிறிய பத்திரிகை என்று யாரையும் புறக்கணிக்காமல் முறையாக வழங்க வேண்டியதை வழங்கி முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செய்தி துறை செயல்பட்டால் நல்லது.
2026 எதிர் வரும் தேர்தலை எதிர்பார்த்து நீங்கள் காத்திருப்பது போல் சலுகைகள் வழங்காவிட்டால் பத்திரிகையாளர்களும் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை அவர்களும் முடிவு செய்வார்கள் கடந்த காலத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடமும் கனிமொழி எம்.பி யிடமும் அமைச்சர் கீதாஜீவனிடமும் மனுக்கள் கொடுத்துள்ளனா். தீர்வு கிடைத்தபாடு இல்லை என்று கூறினார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநில வா்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் கூறுகையில் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் தற்போது ஓர் அணியில் தமிழ்நாடு என்று கூறும் தமிழக முதலமைச்சர் பத்திரிகை துறையில் பணியாற்றுபவர்கள் எல்லாம் வேறு நாட்டில் இருக்கிறார்கள் என்று நினைத்து விட்டார்களோ? அப்படித்தான் அவர்களுடைய செயல்பாடுகள் இருக்கிறது.
அவர்களுக்கான உரிமையை அரசு நிறைவேற்றி கொடுக்கும் இடத்தில் முதலமைச்சரின் தங்கை இந்த தொகுதியின் எம்.பி யாக இருக்கிறார். கட்சியின் மூத்த முன்னோடியை இல்லத்திற்கு சென்று சந்தித்து ஆறுதல் கூறி அந்த இடத்திலிருந்தே முதலமைச்சரைத் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கிறார்கள்.
ஆனால் அவர்களது ஆட்சிக்கு துணையாக இருந்து செயல்படும் பத்திரிகையாளர்களை மட்டும் தொடர்பு கொண்டு குறைகளை தீர்ப்பதற்கு முதலமைச்சரிடம் பேசுவதற்கு நேரம் கிடைக்காதது ஏன்? தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி முழுமையாக ஊடகத்துறையினருக்கு வழங்க வேண்டிய வீட்டு மனை பட்டா முறைப்படுத்தி வழங்க வேண்டும். தமிழகம் முழுவதும் ஓரே மாதிாியான அடையாள அட்டை அங்கீகாிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்ச மின்றி வழங்க வேண்டும் அல்லது கடந்த அதிமுக ஆட்சியில் மாவட்ட செய்தியாளர்கள் புகைப்படகாரா்கள் ஓளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு கலெக்டர் கையெழுத்திட்ட அடையாள அட்டையை வழங்கியது போல் உடனடியாக வழங்க வேண்டும்.
பிரதமா் நரேந்திரமோடி தூத்துக்குடி நிகழ்ச்சிக்கு வந்த போது ஓரு கண்ணில் வெண்ணெய்யும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து செய்தித்துறை செயல்பட்டுள்ளது. இதுவும் ஏற்க கூடிய செயல் அல்ல. இதனால் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதிபெற்று தூத்துக்குடியில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினாா்.
இந்து முன்னனி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா கூறுகையில் ஒரு அரசாங்கமும் அரசியல் கட்சியும் இந்தியாவில் முறையாக செயல்படுவதற்கு மூலக்காரணமாக இருப்பதே ஊடகத் துறைதான் சாலையில் செல்வதற்கு எப்படி பாதை சரியாக இருக்க வேண்டுமோ அதேபோல் அறியாமையில் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி தூய்மையான பணியை செய்வதற்கு ஊடகத்துறை தான் அச்சாரமாக விளங்குகிறது.
அவர்களை அங்கீகரிக்காவிட்டால் இந்த அரசு யாரை அங்கீகரிக்கப் போகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு முறை கூட முறையாக யாருக்கும் வீட்டு மணை பட்டா வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் எதிெராலித்துக் கொண்டே இருக்கின்றன. இதற்கு தீர்வு எப்போது? என்பது தான் கேள்வி?
பல மாவட்டங்களில் பல கட்டங்களாக வீட்டுமணைகள் வழங்கியுள்ள நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கூட திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக சுமார் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கியுள்ளனர். அவர்களுக்கு வழங்கிய இடத்திற்கான மானிய தொகையை அந்த மாவட்ட அமைச்சர்கள் ஐ. பெரியசாமி அ.ர. சக்கரபானி பொறுப்பேற்றுக் கொண்டு சமநிலையில் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
இந்த மாவட்டத்திலும் இரண்டு அமைச்சர்கள் முதல்வரின் தங்கை எம்.பி மேயர் என பலர் இருந்தும் இதை தீர்த்து வைக்க முடியவில்லை என்றால் என்ன நியாயம். இந்தியா பாகிஸ்தான் போரை கூட பேசி முடித்துவிட்டோம். அதுபோன்று இங்குள்ள பத்திரிகையாளர்களை மக்கள் பிரதிநிதிகள் அழைத்து பேசி மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டிய அடையாள அட்டை வீட்டுமனை பட்டா போன்றவற்றை விரைவாக வழங்க வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் பத்திாிகையாளர்களுக்கான உாிமையை பாரபட்சமின்றி ஆட்சியர் இளம் பகவத் உடனடியாக வழங்க முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், மற்றும் இந்து முன்னணி செயலாளர் ராகவேந்திரா கோாிக்கை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பனிமய மாதா பேராலய திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
அடுத்த
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இந்து முன்னணி ஒட்டப்பிடாரம் ஒன்றியம் சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவஞ்சலி மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026