நேரு பூங்கா அருகே தூத்துக்குடி மக்கள் நீண்டநாள் எதிர்பார்த்திருந்த நீச்சல் குளம் விரைவில் உருவாக இருக்கிறது! மாநகராட்சியின் சார்பில் அந்த இடத்தில் பணிகள் தொடங்கும் நிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஸ்பாட்டில் ஆய்வு நடத்தினார்.

பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், விளையாட்டு திறனுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நீச்சல் குளம், தூத்துக்குடி நகருக்கு புதிய அழகை சேர்க்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான நிர்மல்ராஜ், மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி, பகுதி இளைஞரணி அமைப்பாளர் ராஜா ஆகியோர் இணைந்தனர்.

புதிய வசதிகளுடன், குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் தினசரி உடற்பயிற்சி செய்யும் இடமாக இந்த நீச்சல் குளம் மாறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.