தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒட்டநத்தம் கிராமத்தில், தேசதந்தை மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2) கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு, கிராம மக்களுடன் நேரடியாக கலந்துரையாடினார். கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர், சாலை, மின்விளக்கு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்து உடனடி தீர்வுக்கான ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும், சுகாதாரத்துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு உறுதிமொழியும் அனைவரிடமும் எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் வட்டாச்சியர் சண்முகவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், ஜவஹர், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோகுல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், ஊராட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு கருத்துகளை பகிர்ந்தனர்.
தூத்துக்குடி
ஒட்டநத்தம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சண்முகையா எம்எல்ஏ – மக்களிடம் நேரில் கேட்டறிந்தார் அடிப்படை வசதிகள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடிக்கு குளிர்ச்சி தரும் நீச்சல் குளம் – மேயர் ஜெகன் பெரியசாமி ஸ்பாட்டில் ஆய்வு!
அடுத்த
மக்கள் அருகில் மருத்துவம் — சாயர்புரத்தில் MLA ஊர்வசி அமிர்தராஜ் தொடங்கி வைத்த “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026