தூத்துக்குடி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொழுதுபோக்கும் விதமாகவும் மாநகரை சீராக்கும் வண்ணமாகவும் மக்களின் கோரிக்கையின்படி பல்வேறு நடவடிக்கைகளை மேயா் ஜெகன் பொியசாமி எடுத்து வருகிறாா்.
மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பதவி ஏற்ற நாள் முதல் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகளையும் அதன்பின் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நகரை அழகுப்படுத்தும் வகையில் பல்வேறு வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக ஆன்மீக தளங்கள் சிவன்கோவில், பெருமாள்கோவில், மாாியம்மன்கோவில், முத்தராம்மன்கோவில், மேலூா் பத்திரகாளியம்மன்கோவில், நிறைந்த பகுதியில் உள்ள தெப்பக்குளம் சீரமைக்கப்படாமல் உள்ளது என்று பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.
1997 ம் ஆண்டு அப்போது நகர் மன்ற தலைவராக இருந்த ஹென்றி தெப்பக்குளத்தை சீரமைத்தார். இந்நிலையில் தெப்பக்குளத்தை எந்தவகையில் நவீன வசதிகளுடன் எப்படி சீரமைக்கலாம் என்று பல கட்டங்களாக அதிகாரிகளுடன் மேயர் ஜெகன் பொியசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து மாநகராட்சி மேயர் அதிகாரிகளுடன் தெப்பக்குளத்துக்கு நேரில் வருகை தந்து அங்கு அதிகாரிகளிடம் எந்த வகையில் எப்படி சீரமைக்கப்படுகிறது என்ற விபரங்களை கேட்டறிந்து கூறுகையில்
எக்காரணத்தைக் கொண்டும் மழை நீர் கழிவு நீர் தெப்பக்குளத்துக்குள் வரக்கூடாது என்றும் மேலும் பொதுமக்கள் சிறுவர்கள் இரவு நேரத்தில் பொழுது போக்கும் வகையில் அதற்கேற்றாற்போல் அம்சத்தை உருவாக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பின்பு தெப்பக்குளம் பகுதி முழுவதும் சுற்றிப் பார்வையிட்டார்.
தெப்பக்குளம் பகுதி முழுவதும் கிராணைட் கல் பதிக்கப்படுகிறது. பொதுமக்கள் அமர்ந்து கண்டு களிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படுகிறது. இரவை பகலாக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மின் விளக்குகள் பொதுமக்களை கவரும் வகையிலும், தமிழகத்தில் பெரிய மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது போல தெப்பக்குளத்தில் இயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட உள்ளது.
இது பொதுமக்கள் பொழுதுபோக்குடன் இயற்கை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தெப்பத் திருவிழாவின் போது நீர்வீழ்ச்சி வெளியே எடுக்கப்பட்டு விடும் அதன் பின்பு தெப்பக்குளத்தில் விடப்படும், 28 வருடமாக எந்த ஒரு நகரமன்ற தலைவரும் மேயரும் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத நிலையில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய தெப்பக்குளம் சீரமைக்கப்படவுள்ளது.
தெப்பக்குளத்தில் உள்ள நீர் பச்சை கலராக நிறம் மாறுவதால் வாரத்துக்கு ஒருமுறை மோட்டார் மூலம் தெப்பக்குளத்தில் உள்ள நீரை அப்புறப்படுத்தப்படும் தெப்பக்குளத்தில் நீர் நிறம் மாறுவதால் சில நேரங்களில் மீன்கள் இறந்து விடுகிறது. ஆகையால் மீன்களையும் முழு அளவில் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.”
தூத்துக்குடி மாநகர மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவே தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டு இரண்டு மாதத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
ஆய்வின் போது நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனீர்அகமது, இளநிலை பொறியாளர்கள் பாண்டி, அமல்ராஜ், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, வட்ட செயலாளா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், உள்பட பலா் உடனிருந்தனா்.
தூத்துக்குடி
28 வருடத்திற்கு பிறகு 50 லட்சம் ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் ஜொலிக்கவுள்ளது தூத்துக்குடி தெப்பக்குளம் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
செங்கல்பட்டுக்கு வரும் 22 ம் தேதி வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேச்சு!!
அடுத்த
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுக்கு ஆணைகளை அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ வழங்கினாா்கள்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026