தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி தெற்கு மண்டலம் பகுதியில் உள்ள 55, 56, 57 ஆகிய வாா்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கீதா நகாில் உள்ள கீதா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இதில் 13 துறையின் கீழ் 43 வகையான பயன்பாடுகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் நடைபெற்றது. முகாமில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் பொதுமக்களுக்கு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தனா்.  

பின்னர் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு வழங்கிய மனுதாரர்களுக்கு மின்சார வாரியம் மற்றும் பொதுவிநியோக திட்ட பெயர் திருத்தம் ஆகிய ஆணைகளை வழங்கினார்கள்.
    
பின்னா் அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு மதிய உணவை பொதுமக்களுக்கு வழங்கி அவா்களுடன் அமர்ந்து அமைச்சர் கீதாஜீவன் , சண்முகையா எம்.எல்.ஏ உணவருந்தினாா்கள்.  
     
நிகழ்ச்சியில் தாசில்தாா் முருகேஸ்வரி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், தெற்கு மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பழனி, கவுன்சிலா்கள் ராஜதுரை, சுயம்பு, பகுதி செயலாளர் மேகநாதன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், மாநகர நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சின்னத்துரை, வட்டச் செயலாளர்கள் நடசேன் டேனியல், மைக்கேல்ராஜ், துணைச் செயலாளர்கள் தங்கசேகா், முத்துராஜா, பகுதி அணி அமைப்பாளர்கள் சுரேஷ்குமாா், ஜோயல், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், கிராமநிர்வாக அலுவலா்கள் விஜயமூர்த்தி, ராஜேஷ்கண்ணா, பரமேஸ்வாி, மாவட்ட பிரதிநிதி பூபேஸ்நாதன், ஒன்றிய துணைச் செயலாளர் ஹாிபாலகிருஷ்ணன், ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கல்பனா, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், மற்றும் கப்பிகுளம் பாபு, மணி, அல்பட் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
முன்னதாக கலெக்டா் இளம்பகவத், அமைச்சர் கீதாஜீவன் ஆகியோா் தொடங்கி வைத்து பாா்வையிட்டனா்.