திமுக அரசு தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பெரிய அளவில் பிரச்சாரம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில், திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் நிறைவேற்றத் தவறிய தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மக்களிடம் விளக்கமளிக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி நீட் தேர்வு ரத்து, மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, 100 ரூபாய் கேஸ் மானியம், உள்ளிட்ட பத்து முக்கிய வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படாததை எடுத்துரைக்கும் வகையில், ஏரல் பஜார், காந்தி சிலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாக பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தென்காசி வடக்கு மாவட்ட ஐடி பிரிவு செயலாளர் மதன், பொருளாளர் அசோக்க்ராஜ், மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் ஜெபக்குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் விக்னேஷ், ஒன்றிய செயலாளர் காசிராஜன், நகரச் செயலாளர் அசோக்குமார், மாவட்ட ஜெ பேரவை துணைத் தலைவர் ரத்தினசபாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சிவக்குமார், ஜெயசிவசுப்பிரமணியம், மணியன், ராஜா, சுந்தர், ரமேஷ், அர்ஜூன், அழகுராமகிருஷ்ணன், கிங்ஸ்டன், ஜெஸ்வின், கண்ணன், கார்த்திகேயன், பண்ணீர், லெட்சுமணகுமார், சதீஷ், ஜோசப்லாரன்ஸ், முத்துவேல், நவனீதன், பெரியசாமி, பாண்டியன், பால்துரை, சுரேஷ் உள்ளிட்ட பல அதிமுக நிர்வாகிகளும் உற்சாகமாக பங்கேற்றனர்.

திமுக ஆட்சியின் செயல்திறன் குறைபாடுகளை எடுத்துரைக்கும் இந்த நிகழ்வில் பொதுமக்கள் பெரும் ஆர்வத்துடன் பங்கேற்று, “நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சிக்கு மக்கள் மதிப்பெண் வழங்கும் நாள் நெருங்கி விட்டது” என கருத்து தெரிவித்தனர்.