தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வருகின்ற ஆகஸ்ட் 25 ம் தேதி வெற்றித் தலைவர் மக்கள் விரும்பும் தலைமையில் நடைபெற இருக்கின்றது. இரண்டாவது மாநில மாநாடு மற்றும் "வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" என்னும் உன்னத இலக்கையும், மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவர் தளபதியார் மற்றும் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில்,
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட கழகத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A. அஜிதா ஆக்னல் M.Sc,.B.Ed,. தலைமையில், முதற்கட்டமாக சுமார் 100 க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில், விளம்பரங்கள் செய்து மாநாடு வெற்றி பெற ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில், கலந்து கொண்ட 100 க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை ஏற்று, தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

