தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி சண்முகபுரம் பகுதியில் உள்ள பனங்காட்டு தெருவில் நீண்ட நாட்களாக நிலவி வந்த கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு கோரிக்கையை பொதுமக்கள் சமீபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்களுக்கு மனுவாக அளித்திருந்தனர்.
இது குறித்து இன்று அமைச்சர் கீதா ஜீவன் நேரில் அந்தப் பகுதிக்கு சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடி, கழிவு நீர் கால்வாயின் தற்போதைய நிலையை ஆய்வு செய்தார். ஆய்வின்போது உள்ளூர் மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து, கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைவில் தொடங்கும் வகையில் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, அந்தப் பகுதியிலுள்ள பொதுமக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த சீரமைப்பு பணிகள் இப்போது நடைமுறைப்படுத்தப்பட இருப்பதால் மகிழ்ச்சி தெரிவித்தனர். “எங்களது கோரிக்கையை உடனடியாக கவனித்து, திடீரென நேரில் வந்து ஆய்வு செய்த அமைச்சர் அவர்களுக்கு நன்றி,” என பொதுமக்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி
கழிவு நீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி – பனங்காட்டு தெருவுக்கு அதிரடியாக வந்த அமைச்சர் கீதா ஜீவன்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை வழங்க வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் – முன்னாள் அமைச்சர், மேயர் உள்ளிட்டோர் கலந்து ஆதரவு!!
அடுத்த
கனமழையில் சேதமான கதிர்வேல் நகர் சாலை – பொதுமக்கள் கோரிக்கைக்கு உடனடி பதில் – நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026