தூத்துக்குடி நகரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. அதில் முக்கியமாக கதிர்வேல் நகர் பிரதான சாலை பெருமளவில் சேதமடைந்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்திற்குப் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் உடனடி சாலை சீரமைப்புக்கான கோரிக்கை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்களிடம் மனுவாக வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் விரைவாக நடவடிக்கை எடுத்து, அப்பகுதியில் தற்காலிக சாலை அமைப்பதற்கான பணிகளை உடனடியாக ஆரம்பிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் நேரில் கதிர்வேல் நகர் பகுதியில் சென்று சாலை அமைப்புப் பணிகளை ஆய்வு செய்து, பணிகள் விரைவாக நிறைவு பெறுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அவருடன் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கனமழையில் சேதமான கதிர்வேல் நகர் சாலை – பொதுமக்கள் கோரிக்கைக்கு உடனடி பதில் – நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்த அமைச்சர் கீதா ஜீவன்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கழிவு நீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி – பனங்காட்டு தெருவுக்கு அதிரடியாக வந்த அமைச்சர் கீதா ஜீவன்!
அடுத்த
கட்டபொம்மன் நகர் தெய்வத்திரு. நடராஜ் நாயக்கர் மனைவி சந்தண மாரி மறைவு – அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சென்று மரியாதை!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026