தூத்துக்குடி மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமனக் கவுன்சிலராக ஆறுமுகம் பதவி ஏற்றதையடுத்து, அவருக்கு வாழ்த்துகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.
மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாக நியமிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் ஆறுமுகம் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
இதையடுத்து, தூத்துக்குடி குறிஞ்சி நகரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி ஆறுமுகத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அவரது புதிய பொறுப்பில் பணி சிறக்க கனிமொழி எம்.பி மனமார வாழ்த்தினார்.
இந்த சந்திப்பில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாநகராட்சி மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர் பவாணி, வட்டச் செயலாளர் ரவிசந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
உற்சாகப் பயணத்துக்கு கைதட்டல் — மாற்றுத்திறனாளி கவுன்சிலருக்கு கனிமொழி எம்பி வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோவில் வருஷாபிஷேகம் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் அன்னதானம் தொடங்கி வைப்பு!!
அடுத்த
தூத்துக்குடி MAC கார்டனில் தேங்கிய மழைநீரை அகற்ற அவசர நடவடிக்கை — அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026