தூத்துக்குடி MAC கார்டன் பகுதியில் கடந்த இரு நாட்களாக பெய்த கனமழையால் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. இந்த நிலைமை குறித்து பொதுமக்கள் தெரிவித்த புகாரை தொடர்ந்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் இன்று அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
மழைநீர் தேங்கிய பகுதிகளை சுற்றிப்பார்த்த அமைச்சர், பொதுமக்களிடமும் நிலைமையை நேரடியாக கேட்டறிந்து, தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு வழங்கினார். மழைநீரை சீராக வெளியேற்ற கூடுதல் பம்ப் செட்கள் அமைத்தல், நீர் ஓட்டத்திற்கு தடையாக இருந்த பகுதிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைவாக தொடங்கப்பட்டன.
பகுதி மக்கள் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்கும் விதமாக செயல்பட்டதற்கு அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி MAC கார்டனில் தேங்கிய மழைநீரை அகற்ற அவசர நடவடிக்கை — அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உற்சாகப் பயணத்துக்கு கைதட்டல் — மாற்றுத்திறனாளி கவுன்சிலருக்கு கனிமொழி எம்பி வாழ்த்து!!
அடுத்த
பி & டி காலனி 15-வது தெருவில் மழைநீர் பாதிப்புகள் – அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026