திருச்செந்தூர் கும்பாபிஷேகம், கந்தசஷ்டி மற்றும் குலசேகரன்பட்டினம் தசரா போன்ற பெரும் திருவிழாக்கள் இந்த ஆண்டு எந்தவித இடையூறும் இன்றி அமைதியான முறையில் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த வெற்றிக்குப் பின்னால் தவறாது கண்காணித்து பாதுகாப்பு வழங்கிய திருச்செந்தூர் உட்கோட்ட காவல்துறையினரின் அர்ப்பணிப்பே முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த அர்ப்பணிப்பை சிறப்பிக்கும் வகையில் இன்று (09.12.2025) திருச்செந்தூர் உதயம் இன்டர்நேஷனல் மஹாலில் நடைபெற்ற பாராட்டு விழாவில், திருவிழாக்களில் சிறப்பாக பணியாற்றிய உட்கோட்ட காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அமைதியை காக்கும் மௌன வீரர்களுக்கு வழங்கப்பட்ட இந்த பாராட்டு, காவல்துறையின் அர்ப்பணிப்புக்கு சமூகத்தின் நன்றியை எடுத்துக்காட்டுவதாகும்.
தூத்துக்குடி
திருவிழாக்களின் வெற்றிக்கு பின்னால் — காவல்துறையின் கண்காணாத காவல்! திருச்செந்தூர் உட்கோட்ட காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதன்கிழமை மக்கள் நாள்: உங்கள் புகாருக்கு நீதியை கேட்கும் வாய்ப்பு!
அடுத்த
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ தலைமையில் சூரங்குடியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026